Sunday, 19 February 2017

மாயை

கண்டதில்லை மாயை,
என்னவளின் சிணுங்கல் போலே...

காதல் - Love

ஆழ்கடல் மௌனத்தில்
அவள் புன்னகைத்தால்
அம்மாவின் சாயல்
பிறந்தது என் காதல்...

துரோகம் - Betrayal

துரோகத்தின் சுவை
உவர்ப்பாய்
என்னுள்...

Saturday, 18 February 2017

அவள்

சிறுபொழுது அவள் பார்க்க கன நேரம் குளிர்காலம்
சிறுவார்த்தை அவள் பேச கதகதப்பாய்         அது மாறும்
என் குளிரும் என் கதகதப்பும் அவளே...

துணை - Alone forever

'தனிமையே' கலங்காதே
 என்றும் உன்னுடன்
 நானிருப்பேன்...

முரண்பாடு

அலைபேசி அலறல்,
மீண்டும் வாடிக்கையாளர் சேவை ,
உதட்டில் சிரிப்பு ,
கண்கள்  ஏனோ முரண்பாடாய்.

சுவடு

தண்ணீரில் பதிந்த கால்தடமாய்,
என்னவளின் காதல்...